1953 ஹர்த்தால் முதல் வெலிவேரியா வரை..... பாலா தம்புவூம் போராட்டத் தூண்டுதல் தொடா;பில் ஓh;நோ;காணல்!

25 Aug 2013 - Commentary

"மக்களின் எதிர்ப்பு பாரியதாக அமையாது என்ற எதிர்பார்ப்புடனேயே அரசாங்கம் அரிசியின் விலையை அதிகரித்தது. எனினும் ஆகஸ்ட் 12 திகதி அரசாங்கத்தின் அந்த எதிh;பார்ப்புக்கு மாறாக மக்கள் வீதிக்கு வந்தனர்இ வீதிக்கு வந்த மக்கள் பேருந்துகளை அடித்து நொறுக்கியதுடன் புகையிரத தண்டவாளங்களையூம் தொலைத்தொடர்பு தந்தித் தூண்களையூம் அகற்றினர். புகையிரதங்களை வழிமறித்தார்கள். வீதி போக்குவரத்தினைத் தடைப்படுத்தினர். மேலும்இ பல இடங்களில் காவல் துறையினருடன் மோதினர். இவ்வாறு தம் பலத்தினையூம் கோபத்தினையூம் பல வடிவங்களில் மக்கள் வெளிப்படுத்தினர். மக்களின் இவ்வாறான எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சிய அரசாங்கம் அவசரகால நிலைமையை பிரேரித்தது. அத்துடன் அரிசியின் விலையைக் குறைத்ததுடன் பிரதமராக பதவி வகித்த டட்லி சேனநாயக்கா தனது பதவியை இராஜிநாமாச் செய்தார். அந்த ஹர்த்தால் பலவிதமான பாடங்களைக் கற்பித்தது. நகர்ப்புறத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்கு கிராமத்தில் இருக்கும் தங்கள் சகோதர சகோதரிகள் நேசசக்தியாக உள்ளனர் என்ற செய்தியை சுட்டிக்காட்டியது. மற்றும் தொழிலாளர்களும் கிராமப்புற மக்களும் ஒன்று கூடினால் முதலாளித்துவ அரசினை எதிர்கொள்ள முடியூம் என்பதையூம் அரசினை ஆட்டங்காண வைக்கலாம் என்பதையூம் தெரிவித்தது. இந்த ஹர்த்தால் பலமடைந்த மக்கள் அடுத்த பாரிய போராட்டங்களை நம்பிக்கையூடன் எதிர்கொள்வார்கள். ஆனால் அடுத்த போராட்டம் நன்கு தயாரிக்கப்பட்டதும் பலமுள்ளதுமான எதிரியை எதிர்கொள்ள வேண்டியதொன்றாக இருக்கும்.”

(பாலா தம்பு ஹர்த்தாலின் அத்தியாயங்கள் 1956)

இலங்கை வணிக தொழிற்சங்கத்தின் தொண்ணூறு வயது –நிரம்பிய பொதுச் செயலாளர் பாலா தம்புவை கடலோரத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்திருத்தேன். தொழிற்சங்கங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு பற்றி அறிந்து கொள்ளும் நோக்கிலேயே அவரைச் சந்தித்திருந்தேன். அண்மையில் நம்மவரில் அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள்இ ஆய்வாளர்கள் சிலர்இ பொருளாதார ஜனநாயக மயப்படுத்தல் என்ற தன்னார்வக் குழுவொன்றை ஸ்தாபித்து முற்போக்கான போராட்டங்களுக்கு சார்பாகஇ அரசியல்-பொருளாதார பகுப்பாய்வை மேற்கொள்ளும் நோக்கோடு செயற்பட்டு வருகிறௌம். இதனடிப்படையில் 1953 ன் பெரும் ஹர்த்தால் எமக்களித்த வரலாற்றுப்பாடத்தினை மனதில் கொள்ளுவதும் அதன் தற்போதைய முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதும் அவசியம் என்ற நிலைப்பாட்டில் பாலாவூடன் அது பற்றி உரையாட நான் விரும்பினேன்.

அhpசியூம் நீரும்

இந் நேர்காணலின் போது பாலாஇ காலனித்துவத்துகெதிரான போராட்டம்இ காலனிய விடுதலைஇ 1941ல் லங்க சம சமாஜ கட்சியின் தலைமறைவூ வாழ்க்கையூள் நுழைவூஇ ஆரம்ப காலத்தில் விவசாயத்துறையில் விரிவூரையாளராப் பணிபுரிந்தமைஇ 1948 இல் தொழிற்சங்க தலைவராக தான் தலைமைவகித்தமைஇ பல தசாப்தங்களாக தொடர்ந்து தொழிலாளருடன் வேலை செய்தமை ஆகியவற்றைப் பற்றி பேசினார்.

“நீங்கள் வெலிவேரியாவில் சாதாரணஇ ஆயூதம் தரியாத மூவர் துப்பாக்கிச் சு+ட்டுக்கிரையாகிய செய்திகளை படித்திருப்பீர்கள். அத்தாயின் முகத்தைப் பார்த்தீர்களா? திகிலடைந்த அந்த முகம்? ஒரு தாய்க்கு வேறெதையூம் விட அவளின் மகன் தான் முக்கியம். அந்த மகன் அவளுடையவன்இ அவளின் ஒரு அங்கம். மக்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இதுதான் எல்லாவற்றையூம் விட முக்கியம் பெறுகிறது. இக்கொலைகளுக்கு காரணம் யாது? ஒரு சில நூறு சாதாரண மக்கள் கண்டி வீதியில் ஏறி போக்குவரத்தைஇ வாகனங்களை தடை செய்தனர். ஏன் செய்தார்கள்? நான் சொல்லுகிறேன்இ ஏனெனில் நான் 1953 ஹர்த்தாலில் நின்றிருந்தேன்இ

அச்சமயம் நிதி அமைச்சராயிருந்த ஜே. ஆர் ஜயவர்த்தனா அரிசியின் விலையை மூன்று மடங்காக 25 சதத்திலிருந்து 75 சதமாக உயர்த்தினார். பலபிட்டியவில் வறிய மக்களின் முக்கிய வாழ்வாதார முயற்சிஇ தென்னை மர தும்பு செய்தல். தும்புவின் விலை விழுந்தது ஆனல் அரிசியின் விலை உயர்ந்தது. பெண்கள் குறிப்பாக தாய்மார்இ தம் பிள்ளைகளுக்கு உணவூ கொடுக்க வழியின்றி தவித்தனர். அவர்களுக்கு அரிசி வாங்க பணமில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள்? மக்கள் மிகுந்த நெருக்கடிக்காளாகும் பொழுதுஇ அவர்கள் தமது கையாலாகாத நிலைமையை பொதுஜனத்தின் கவனத்துக்கு கொணரும் நோக்கத்துடன் வீதிக்கு வருகிறார்கள். இது ஒரு போராட்டம் எனக்கொள்ள இயலாது.வெறுமனே அவர்கள் தம் –நிலைமைபற்றி கவன ஈர்ப்பு பெற செய்யூம் முயற்சியாகும். பலபிட்டியாவில் ஒரு கிராமத்திலிருந்து ஒரு பெண்கள் கூட்டம் காலி கொழும்பு வீதியில் போய் அமர்ந்து வாகனப் போக்குவரத்தை தடை செய்தார்கள். அப்பொழுது அம்பலாங்கொடை பொலிஸார் வந்தனர். ஒரு இளைய காவல்துறை அலுவலகா; அங்கு அமர்ந்திருந்த 70 வயது பெண்மணியை அணுகினார். அவருடைய ஒரு முழங்கையை பிடித்து அவரை எழுப்பி அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றார். அவ்வயோதிப் பெண்மணி தனது மறு கையால் காவல்துறை அலுவலருக்கு கன்னத்தில் அறைந்து விட்டார். அச்சமயம் நான் லங்கா சம சமாஜக் கட்சியின் உயர் மத்திய குழுவில் இருந்தேன். இந்த நிகழ்வூ ஒரு முக்கியமான திருப்பு முனை என நான் அப்பொழுது எண்ணினேன். இது ஒரு கொழுந்து விட்டெரியக்கூடிய ஒரு சிறு தீப்பொறி. நாம் ஒரு பெரிய போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டியிருந்தது. அப்பெண்கள் வீதிக்கு இறங்கியதும் அம்முதிய பெண் உதவி காவல்துறை அதிகாhpயை கன்னத்தில் அறைந்தமை அவர்கள் எவரையூம் எதிர்க்க தயாராகிவிட்ட ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள் என்பதின் அறிகுறியேயாகும். இதுவே லங்கா சம சமாஜ கட்சி ஒரு பொது வேலை நிறுத்தத்தைஇ ஹர்த்தாலை அறைகூவக்காரணமானது.

நான் அந்த ஹர்த்தாலை ஒழுங்கு செய்திருந்ததனால் இன்று வெலிவேரியாவில் ஏன் மக்கள் தெருவில் இறங்க்கினார்கள் என வினவூகின்றேன். தண்ணீர்! வெலிவேரியாவில் மக்களுக்கு தேவை தண்ணீர்இ ஏன்இ மனிதருக்கு தண்ணீர் ஒரு அடிப்படைத் தேவை. நான் தாவரவியல் கற்றவனாகையால் எவ்வகையில் தண்ணீர் தாவரங்களுக்கும் தேவை என்பதை நன்கு உணர்ந்தவன். தண்ணீர்இ வாழ்க்கையின் அடிப்படை தேவை. நாம் எமது தொழிற்சங்கத்தினால் ஒரு இயக்கம் ஒன்றை.

ஆரம்பிக்கவிருக்கிறௌம். இந்த தீவினில் உயிர்வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் தூய நீர் வசதி வழங்குவது அரசின் கடமை. முதலாளித்துவ தொழிற்சாலைகள் பல்தேசியக் கம்பனிகளிலிருந்து வரும் கழிவூகள்இ இரசாயன பதார்த்தங்கள் மக்களின் கிணறுகளை மாசடையாமல் செய்வது முக்கியம்.
தண்ணீர் தான் பிரச்சினைக்குரிய விடயம். தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் நச்சு இரசாயன பதார்த்தங்கள் தமது கிணறுகளை மாசுபடுத்துகின்றன என நம்பிய மக்கள் போய் இராணுவத்தை எதிர்கொள்ள தயாராய் இருந்தார்கள் என்பதை நாம் மூடி மறைக்க முடியாது. இப்போராட்டம் இன்னொரு விடயத்தையூம் தௌpவூ படுத்துகின்றது. இந்நாட்டில் சாதாரணமானதொரு பிரச்சனைக்கு தெருவில் மறியல் செய்தால் அதற்கான தண்டனை: மரண தண்டனை! அது தான் இங்கு நிலைமை. மரணதண்டனை!”

ஒடுக்குமுறையூம் போராட்டமும்

பாலா தம்பு தொழிற் சங்க வரலாற்றில் பலரை வளர்த்து செல்வாக்குச் செலுத்தியவர். இதேவேளை பலருடனும் முரண்பட்டும் உள்ளார். அவர் தொழிற்சங்கத்திற்கு தலைமைத்துவம் வழங்கிய 65 வருட காலப்பகுதியில் தொழிற்சங்கம் அரசியல் மயப்பட்டும் உள்ளது. ஆனால் பல தசாப்தங்களாக அர்ப்பணிப்புடனான தம்புவின் சேவையை மதிக்கும் முகமாக தொழிற்சங்க ஆராய்ச்சிக்கும் கல்விக்குமான தேசிய அமைப்பு இவரை கௌரவித்துள்ளது. இவ்வமைப்பு நாட்டில் உள்ள கூடுதலான அமைப்புக்களை இணைத்து ஒரு அமைப்பாக இயங்கி வருகின்றது.

பாலா தம்புவின் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறௌமோ அல்லவோஇ அவருடைய ஆளுமையினால் சகலரும் ஊக்கமடைவர் என்பதானாலேயே அவர் கௌரவிக்கப்படுகின்றார். அவரின் ஊக்கம் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களையூம் அரசியல் வாதிகளையூம் எதிர்காலத்திலும் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை. பாலா தம்பு ஒரு சில நாட்களில் பிரதான தொழிற்சங்கங்கள் அனைத்தும் அங்கம் வகிக்கும் தேசிய தொழிற்சங்க ஆய்வூகளுக்கும் கல்விக்குமான அமைப்பு தமது 15ஆவது வருடத்தை கொண்டாடும் பொழுது பாலா தம்புவை கௌரவிக்க உத்தேசித்துள்ளது. உழைக்கும் மக்களுக்கான அவரது அர்ப்பணிப்பு இலங்கையிலும் வேறு நாடுகளிலும் உள்ள தொழிற்சங்க வாதிகள்இ இடதுசாரிகளின் வரும் தலைமுறையினருக்கு அவர் ஒரு ஆதர்ச புருஷனாக இருப்பார்.

எகிப்திலும் டியூனிஸியாவிலும் ஏற்பட்ட அரபு எழுச்சிகளுக்கு ஆதரவூ நல்கும் வகையில் தம்புவின் அலுவலகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. உலகளாவிய ரீதியில் பாலா தம்புவூக்கு தொழிற்சங்க வாதிகளுடன் இருக்கக் கூடிய தொடர்புகள் மற்றும் உலக முதலாளித்துவ முறைமை எவ்வகையில் அழிவைக் கொணரக்கூடும் என்பது பற்றிய அவரின் புரிந்துணர்வூ ஆகியவை எமக்கு புலப்படுகின்றது. இத்தகைய ஒரு புரிந்துணர்வூக்கு ஒரு மார்க்ஸிய உலகளாவிய கண்ணோட்டம் அத்தியாவசியம். பாலாவின் துணிச்சல் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் கவரப்பட்ட எம்மில் பலருக்கு ஒரு கேள்வி எழுகிறது. பாலாவின் உத்வேகம் எங்கிருந்து வருகின்றது? பின் வருவது ஒரு உதாரணம்.

“1967ல் நான் அமெரிக்காவிலிருந்த பொழுதுஇ நியூ+யோர்க் திரையரங்கு ஒன்றில் கறுப்பர்களின் உரிமைப்போராட்டம்இ வியட்நாம் போருக்கெதிரான போராட்டம் ஆகியவற்றுக்கு ஆதரவாக நடந்த ஒரு பெரிய கூட்டத்துக்கு சென்றிருந்தேன். பலரும் என்னை ஒரு வீரியமுள்ள பேச்சாளர் என கூறுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அந்த கறுப்பின பேச்சாளர்களின் பேச்சை நீங்கள் கேட்க வேண்டும். அவர்களுக்கு அருகில் நான் ஒரு சாதாரண பேச்சாளர் என்று தான் கூற வேண்டும். அங்குஇ வன்முறையற்ற ஒருங்கிணைப்பிற்கான குழு என்ற ஒரு சங்கத்திலிருந்து ராப் பிறவூன்; என்று ஒரு இளம் மாணவ பேச்சாளர் வந்திருந்தார். வன்முறையற்ற இச்சங்கம் சார்பாக அவ்விளைஞன் தமது போராட்டங்களில் தீவைத்தலை ஒரு நியாயமான போராட்ட முறைமையாக ஆதரித்து பேசினான். நான் அவனுடைய பேச்சைக்கேட்டேன். பின் அவன் கைது செய்யப்பட்டான். நான் அதை தொலைக்காட்சியில் பார்த்தேன். மிக உயரமானவன்இ கைவிலங்குடன் காணப்பட்டான். பத்திரிகையாளர்கள் அவனிடம் கேள்வி கேட்ட வண்ணமே அவனுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். இந்த ‘தீவைப்பு’ குற்றச்சாட்டு பற்றி என்ன சொல்கிறீர்கள் என

ஒருவன் கேட்டான். “கறுப்பர்களே ஐக்கிய அமெரிக்காவை கட்டி எழுப்பினார்கள் கறுப்பர்களே அதை இழுத்து வீழ்த்துவர்கள்!” எனக் கூறினான். அவனுக்கு பிணை வழங்கப் பட்டு நியூ+ யோர்க்கில் கூட்டத்தில் பேச வந்தான். கூட்டம் நிரம்பி வழிந்தது. பார்வையாளர்களில் மூன்றிலொருவர் வெள்ளையர். மூன்றிலிரு பகுதியினர் கறுப்பர்கள். இதுதான் கறுப்பர் விடுதலை இயக்கமும் வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கமும் ஒன்றாக இணந்து நடத்தியது நானும் அன்று கூட்டத்தில் இருந்தேன். “நான் பிணையில் வெளிவந்திருக்கிறேன். என்னை வழக்குக்கு கொணரும் பொழுது நீங்கள் எல்லாம் நீதிமன்றை சு+ழ்ந்து கொள்ள வேண்டும். என்னை சிறைக்கு அனுப்பினால் கோர்ட்டை உடைத்து வீழ்த்துங்கள்...” என்று அவன் சொன்னான். ஹா...ஹா....”

அறுபதுகளில் கறுப்பர் விடுதலை இயக்கமாயிருந்தாலென்ன இன்று வெலிவேரியா கிராமத்தவரின் போராட்டமாகவிருந்தாலென்ன பாலாவூக்கு ஒடுக்கப்பட்ட மக்களும் அவர்களின் போராட்டங்களுமே அரசியல் முக்கியத்துவம் பெறுபவை. அரசியல் பற்றிய அவரது கண்ணோட்டத்தின் வித்தியாசமும் அதுவே. கட்சிகளும் பராளுமன்ற அரசியலும் அவருக்கு முக்கியமல்ல.

“அநேகமான அரசியல் கட்சிகள் உழைக்கும் மக்களை வெறும் வாக்களிக்கும்; வாக்கு வங்கிகளாகவே பார்க்கின்றன. கட்சிகள் தொழிற்சங்கங்களை ஒழுங்கமைத்துஇ கட்டுப்பாட்டில் வைத்திருப்பதனால் தொழிலாளருடைய வாக்குகளை உறுதிப்படுத்துவதற்கு சிறந்த முறை தொழிற்சங்கங்களில் அவர்களை பதிவூ செய்து கொள்வது தான். பாராளுமன்ற முறைமை பற்றிய எனது அனுபவமும் அறிவூம் சொல்வது யாதெனில்இ முதலாளித்துவ அமைப்பு பாராளுமன்ற அரசியலை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறது. அசாதாரண சு+ழ்நிலைகளில் எழுந்த சர்வாதிகார ஆட்சிகள் இருந்துள்ளனஇ ஆனால் கடைசியில் அவற்றால் நிலைத்து நிற்க முடியவில்லை. தேர்தலடிப்படையிலான பாராளுமன்ற அரசியல் முறைமைகள் இச்சர்வாதிகார அரசியலை பிரதியீடு செய்கின்றன. மக்கள் பாராளுமன்ற அரசியல் பொறி முறைக்குள் வாக்காளர்களாக சிக்கிக் கொள்கிறார்கள். தவிர்க்கமுடியாத படி அரசாங்கம் எதிர்தரப்பு என்ற இரு துருவ அரசியல் முதலாளித்துவ முறைமைக்கு ஒரு மின் ஆழி (ஸ்விட்ச்) போல் சேவகம் செய்கின்றது. அது நிலைமாறி மாறி மின்விசை ஒளிர்ந்து அணையூமாப்போல் இயங்குகிறது. ஒரு பக்கம் அழுத்தம் கூடும் பொழுது மற்றப் பக்கம் அழுத்தம் பாய்கின்றது. அது ஒரு பாதுகாப்பு வால்வூ மாதிரி இயங்குகின்றது. முதலாளித்துவ முறைமையூடன் இணைந்து முதலாளித்துவ ஆட்சியை பூர்த்தி செய்யூம் ஒரு பாத்திரத்தை வகிக்கின்றது.”

நாடு நவதாராளவாத எதேச்சாதிகார ஆட்சியொன்றின் கீழ் மூச்சு திணறுகின்றது. பாலாவின் பாராளுமன்ற அரசியலை பற்றிய விளக்கம் எமது சிந்தனையை தூண்டி ஆழமான ஒரு தேடலை மேற்கொண்டு மாற்று வழிகளைக் கண்டடைய வேண்டும். வர்க்கப் போராட்டத்தில் பாலாவின் நம்பிக்கையூம் உறுதியூம் எதிர்காலத்தில் இளைய தலைமுறையினரை ஆகர்ஷித்து 1953 ஹர்த்தாலின் ஆன்மா மீள எம்மத்தியில் எழுச்சி பெறுமா?